தினமும் 3 கப் காய்கறிகள், 2 கப் பழங்கள்; உங்கள் ஆயுளை நீட்டிக்கும் ரகசியம் இதுதான்!

பழங்கள்
“சாம்பாரில் இருக்கிற காய்கறிகளில் ஒரு கரண்டி, பொரியலில் ஒரு கரண்டி என்று சாப்பிடுவதே போதுமானது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க…!
எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!
பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பலரும் அறியாதது. இரவு வேளைகளில் சாப்பிடுகிற ஒரு வாழைப்பழமும் சாப்பாடுத் தட்டின் ஓரத்தில் இருக்கிற ஒரு கரண்டி காய்கறிப் பொரியலுமே நாளொன்றுக்கு போதுமானவை என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகம், நாளொன்றுக்கு இரண்டு கப் பழம், மூன்று கப் காய்கறி சாப்பிட்டால் இதயம் உள்ளிட்ட உடலின் முக்கியமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், மனிதர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்கிற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இதுபற்றி ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணனிடம் பேசினோம்.
“நம் நாட்டில் காய்கறிகளையும் பழங்களையும் மிகக்குறைவாகவே சாப்பிடுகிறார்கள். `என் பசங்களுக்குக் காயே பிடிக்காது’ என்பது வருந்தத்தக்க விஷயம். `நாங்க காய்கறிகள் நல்லா சாப்பிடுவோம் மேடம்’ என்று என்னிடம் சொல்பவர்களிடம் பேசிப் பார்த்தால், நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு வேளைக்கு மொத்தமாக 250 கிராம் காய்கறி மட்டுமே சமைப்பது தெரிய வரும். இது எப்படிப் போதுமானதாக இருக்கும்? நான்கு பேருக்குக் கிட்டத்தட்ட ஒரு கிலோ காய்கறி சமைத்தால்தான் சரியாக இருக்கும். காய்கறிகள் உடலுக்கு நல்லது என்கிற விழிப்புணர்வு இருப்பவர்கள்கூட, சாம்பாரில் இருக்கிற காய்கறிகளில் ஒரு கரண்டி, பொரியலில் ஒரு கரண்டி என்று சாப்பிடுவதே போதுமானது நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சி சொல்கிற அளவுக்குக் காய்கறிகள் சாப்பிட்டீர்களென்றால், உங்கள் சாப்பாட்டுத் தட்டில் பாதியளவு காய்கறிகள்தான் இருக்கும். கால் பாகம் அரிசி சாதமும், மீதமுள்ள கால் பாகம் பருப்பு அல்லது முட்டையென்று இருக்க வேண்டும். நாம் தலைகீழாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
வத்தல், வடகம், சிப்ஸ், பேக்கரி உணவுகள் ஆகியவற்றில் போடுகிற பணத்தைக் காய்கறிகளுக்குச் செலவழித்தால் ஆரோக்கியம் நிச்சயம். ஒருவருக்கு மாதமொன்றுக்கு அரை லிட்டர் எண்ணெயே போதுமானது. ஆனால், வறுத்த, பொரித்த உணவுகளின் மீதான அதீத விருப்பத்தால், ஒருவர் ஒரு லிட்டரையும் தாண்டி எண்ணெய் எடுத்துக்கொண்டிருக்கிறோம். எண்ணெய் வாங்கச் செலவழிக்கிற பணத்தை காய்கறி மற்றும் பழங்களில் செலவழிக்கலாம். கொரோனாவுக்கு முன்புவரை பெரும்பான்மையினர் காய்கறிகளுமில்லாமல் பருப்புமில்லாமல் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் மட்டுமே கொண்ட கலந்த சாதம், சிப்ஸுடனே சாப்பாட்டை முடித்துக்கொண்டிருந்தார்கள். பிரியாணியில்கூட வெறும் குஸ்காவை சாப்பிட்டால் அதன் மூலம் கிடைக்க வேண்டிய புரதம்கூட கிடைக்காது’’ என்று வருத்தப்பட்டவர், நாளொன்றுக்குச் சாப்பிட வேண்டிய காய்கறி, பழங்களுக்கான அளவுகளைக் குறிப்பிட்டார்.

Also Read
